மரத்தில் இருந்து தவறி விழுந்த இளநீர் வியாபாரி சாவு

மரத்தில் இருந்து தவறி விழுந்த இளநீர் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
மரத்தில் இருந்து தவறி விழுந்த இளநீர் வியாபாரி சாவு
Published on

விழுப்புரம் அருகே சோழம்பூண்டி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 52). இவர் இளநீர் விற்பனை தொழில் செய்து வந்தார். நேற்று காலை அவர், விழுப்புரம் பாப்பாங்குளம் பகுதியில் உள்ள தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறிக்கும்போது 20 அடி உயரத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சந்திரன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com