மெரினா கடற்கரையில் இளைஞர்களோடு சேர்ந்து மது அருந்திய இளம்பெண்

மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மெரினா கடற்கரையில் இளைஞர்களோடு சேர்ந்து மது அருந்திய இளம்பெண்
Published on

சென்னை,

கோடை விடுமுறை காரணமாக மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே அங்கு கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மெரினா கடற்கரை மணற்பரப்பில் இளம்பெண் ஒருவர் இளைஞர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தார். அப்போது ரோந்து போலீசார் அவர்கள் அருகில் சென்று பார்த்தபோது அவர்கள் மது போதையில் இருந்தனர்.

இளம்பெண்ணும் மதுபோதையில் மிதந்தார். அவர்கள் அருகே காலி மதுபாட்டில்களும், நொறுக்கு தீனிகளும், துரித உணவுகளும் இருந்தன. அவர்களுடைய செயல்பாடு மெரினா கடற்கரைக்கு குடும்பத்துடன் வந்து இருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது.

போலீசார் விசாரித்ததில் அவர்கள் 'டாஸ்மாக்' கடையில் மதுபாட்டில்களை வாங்கி வந்து கடற்கரையில் அமர்ந்து அருந்தியது தெரியவந்தது. மேலும் தங்களுடைய செயலுக்கு அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் இளம்பெண்ணையும், இளைஞர்களையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com