சாலையோரத்தில் இறந்து கிடந்த இளம்பெண்

சாலையோரத்தில் இறந்து கிடந்த இளம்பெண் கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையோரத்தில் இறந்து கிடந்த இளம்பெண்
Published on

பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரது மகள் அபிநயா(வயது 23). இவர் நேற்று உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் பொட்டக்கொல்லை பகுதியில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தத்தனூர் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்சாமி வழக்குப்பதிவு அபிநயா கொலை செய்யப்பட்டாரா? அல்லது விபத்தில் இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com