70 வயது முதியவருடன் இளம்பெண் உல்லாசம்... அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

பூ வியாபாரம் செய்யும் 38 வயது இளம்பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து முதியவர் உல்லாசமாக இருந்தார்.
70 வயது முதியவருடன் இளம்பெண் உல்லாசம்... அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
Published on

போரூர்,

சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் மகளுடன் வசித்து வருகிறார். கோடை விடுமுறையை முன்னிட்டு கடந்த வாரம் முதியவரின் மகள் வெளியூர் புறப்பட்டு சென்று விட்டார். இதனால் தனிமையில் இருந்த முதியவர் ஏற்கனவே தனக்கு பழக்கமான அண்ணா நகர் சாந்தி காலனியை சேர்ந்த பூ வியாபாரம் செய்யும் 38 வயது இளம்பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்தார்.

அப்போது முதியவரின் கவனத்தை திசை திருப்பிய இளம்பெண் வீட்டு பீரோவில் வைத்திருந்த 6 1/2 பவுன் தங்க நகைகளை சுருட்டி சென்றுவிட்டார்.

இந்தநிலையில் நேற்று வீடு திரும்பிய முதியவரின் மகள் விஷேச நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நகையை எடுக்க பீரோவை திறந்தபோது அதில் இருந்த நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தந்தையிடம் விசாரித்தபோது வீட்டு வேலைக்காக பெண் ஒருவரை வரவழைத்ததாக கூறி சமாளித்தார். இது குறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய இளம்பெண்ணை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com