குடும்ப பிரச்சினை குறித்து கூறிய இளம்பெண்; தீர்த்து வைப்பதாக கூறி கோவில் பூசாரி செய்த படுபயங்கரமான செயல்


குடும்ப பிரச்சினை குறித்து கூறிய இளம்பெண்;  தீர்த்து வைப்பதாக கூறி கோவில் பூசாரி செய்த படுபயங்கரமான செயல்
x
தினத்தந்தி 10 July 2025 4:51 PM IST (Updated: 10 July 2025 6:30 PM IST)
t-max-icont-min-icon

மதிய நேரத்தில் கோவில் பூட்டப்பட்டு இருந்ததால் அருகில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டிற்கு செல்லலாம் என்று கூறி இளம்பெண்ணை கோவில் பூசாரி அழைத்து சென்றார்.

சென்னை

சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது கோவில் பூசாரியான அசோக்பாரதியுடன் இளம்பெண்ணிற்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து தனது குடும்ப பிரச்சினை குறித்து இளம்பெண் அவ்வபோது கலந்து பேசி வந்தார்.

இந்தநிலையில், குடும்பபிரச்சினைக்கு காரணமான தீய சக்திகளை அழிக்க ருத்ராட்சம் மாலை வாங்கி தருகிறேன் இதனால் உன் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் சரியாகி விடும் என்று பூசாரி அசோக்பாரதி ஆசை வார்த்தை கூறினார். இதனையடுத்து அவர் இளம்பெண்னை வடபழனி முருகன் கோவிலுக்கு அழைத்து வந்தார். மதிய நேரத்தில் கோவில் பூட்டப்பட்டு இருந்ததால் அருகில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டிற்கு செல்லலாம் என்று கூறி இளம்பெண்ணை அழைத்து சென்றார்.

அங்கு தனிமையில் இருந்தபோது கோவில் பூசாரி அசோக்பாரதி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். குடும்ப பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி கோவில் பூசாரி செய்த படுபயங்கரமான செயலை கண்டு இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து இளம்பெண் தெற்கு மண்டல இணை கமிஷனரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வடபழனி அனைத்து மகளிர் போலீசார் பூசாரி அசோக் பாரதி மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இளம்பெண்ணுடன் தனிமையில் பேசிக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த இளம்பெண்ணின் கணவர் தன்னை தாக்கி செல்போனில் படம் பிடித்து வைத்துக்கொண்டு ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாக பூசாரி அசோக் பாரதி வடபழனி போலீசில் புகார் அளித்து உள்ளார். இது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

1 More update

Next Story