முதல்-அமைச்சர் விஜய் கான்வாயில் புகுந்த வாலிபரால் பரபரப்பு

கார் கண்ணாடி கதவுகளை இறக்கிவிட்டு முதல்-அமைச்சர் விஜய் கையசைத்து செல்கிறார்.
முதல்-அமைச்சர் விஜய் கான்வாயில் புகுந்த வாலிபரால் பரபரப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் த.வெ.க. அரசு புதிதாக அமைந்த நிலையில் முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். தலைமை செயலகத்திற்கு அவர் வந்து செல்லும்போது பொதுமக்கள், தொண்டர்கள் பலர் தலைமை செயலகத்தின் வாசல் அருகே நின்றிருந்து பார்த்து செல்கின்றனர். அவரும் கார் கண்ணாடி கதவுகளை இறக்கி விட்டு கையசைத்து செல்கிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை தலைமை செயலகத்தில் இருந்து காரில் தனது வீட்டிற்கு முதல்-அமைச்சர் விஜய் புறப்பட்டார். அப்போது அவரை பார்க்கும் முயற்சியில், போலீஸ் பாதுகாப்புடன் சென்ற முதல்-அமைச்சரின் கான்வாய் வாகனத்தின் இடையே வாலிபர் ஒருவர் திடீரென புகுந்தார்.

அந்த நபரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் அந்த நபரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது பரபரப்பு நிலவியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com