கங்கைகொண்டான் சிப்காட்டில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செம்பு பட்டைகள் திருடிய வாலிபர் கைது

கங்கைகொண்டான் சிப்காட்டில் சைட் இன்ஜினியர் கம்பெனி செட்டில் வைத்திருந்த வேலைக்கு தேவையான பொருட்களை பார்த்தபோது, அங்கே ரூ.30,000 மதிப்புள்ள செம்பு பட்டைகளை காணவில்லை.
மதுரை மாவட்டம், மேலூர், சுந்தரராஜபுரத்தை சேர்ந்த இளையராஜா (வயது 32) என்பவர் கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் சைட் இன்ஜினியர் ஆக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் 14.7.2025 அன்று இளையராஜா, கம்பெனி செட்டில் வைத்திருந்த வேலைக்கு தேவையான பொருட்களை பார்த்தபோது, அங்கே ரூ.30,000 மதிப்புள்ள செம்பு பட்டைகளை காணவில்லை.
இதுகுறித்து இளையராஜா கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அபினேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த விஜயபிரசன்னா(29) என்பவரும் மற்றும் ஒருவர் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர், விஜயபிரசன்னாவை இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார்.






