55 வயது பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது

போலீசார் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.
55 வயது பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கம்பிளியபட்டி காலனியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 25). நேற்று முன்தினம் இரவு இவர், ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்த 55 வயது பெண்ணை கட்டிப்பிடித்து தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. ஆனால் அந்த பெண் அவரை தள்ளிவிட்டு ஓடிவிட்டார். இது குறித்து அந்த பெண், வெள்ளகோவில் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக்கை கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் காயம் அடைந்த அந்த பெண் காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com