மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்
மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
Published on

மணப்பாறை, மே.24-

மணப்பாறை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் இறந்தார்.

வாலிபர் சாவு

மணப்பாறையை அடுத்த தகரக்கடை பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. சம்பவத்தன்று இவர் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் உசிலை ஊரணி அருகே சென்று கொண்டிருந்தார்.அப்போது, ராயம்பட்டியைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 21) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சத்தியமூர்த்தி சென்ற மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மோகன்ராஜ் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இது குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com