மது விற்ற வாலிபர் கைது

மது விற்ற வாலிபர் கைது
மது விற்ற வாலிபர் கைது
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் மற்றும் போலீசார் நேற்று காலை நாகர்கோவில் ஆம்னி பஸ்நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், வடசேரி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த விக்னேஷ் குமார் (வயது 25) என்பதும், அங்கு மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் விக்னேஷ்குமாரை கைது செய்து, அவரிடம் இருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com