சாராயம் விற்ற வாலிபர் கைது

மயிலாடுதுறையில் சாராயம் விற்ற வாலிபர் கைது
சாராயம் விற்ற வாலிபர் கைது
Published on

மயிலாடுதுறை திருவிழந்தூர் பல்லவராயன் பேட்டை அய்யனார்கோவில் அருகில் சாராய விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அந்த பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த பூராசாமி மகன் பசுபதி (வயது 28) என்பதும்,அவர் அந்த பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுபதியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லி ட் டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com