கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஆதார் மையத்தில் 20 பேருக்கு மட்டும் சேவை வழங்கப்படுவதால் பொதுமக்கள் ஏமாற்றம்-மைய ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் செயல்படும் ஆதார் மையத்தில் ஒரு நாளைக்கு 20 பேருக்கு மட்டுமே சேவை வழங்கப்படுவதால், ஆதார் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள குழந்தைகளை அழைத்து வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். அதனால் அவர்கள் ஆதார் மையம் குறித்த நேரத்தில் திறக்கபடுவதில்லை என்று குற்றம் சாட்டி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஆதார் மையத்தில் 20 பேருக்கு மட்டும் சேவை வழங்கப்படுவதால் பொதுமக்கள் ஏமாற்றம்-மைய ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Published on

கோத்தகிரி

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் செயல்படும் ஆதார் மையத்தில் ஒரு நாளைக்கு 20 பேருக்கு மட்டுமே சேவை வழங்கப்படுவதால், ஆதார் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள குழந்தைகளை அழைத்து வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். அதனால் அவர்கள் ஆதார் மையம் குறித்த நேரத்தில் திறக்கபடுவதில்லை என்று குற்றம் சாட்டி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆதார் சேவை மையம்

கோத்தகிரி தாசில்தார் அலுவலக 2- வது தளத்தில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த மையம் வாரத்தில் புதன் மற்றும் வெள்ளிக் கிழமை என 2 நாட்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இது குறித்த செய்தி தினத்தந்தி நாளிதழில் வெளியானதையடுத்து முழு நேர ஊழியர் ஒருவர் அங்கு பணியமர்த்தப்பட்டுள்ளார். ஆனால் அந்த ஊழியருக்கு இன்னும் ஆதார் திருத்தங்கள் செய்வதற்கான இணையதள அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த ஆதார் மையத்தில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 20 பேருக்கு மட்டுமே பெயர் சேர்த்தல், நீக்கல், புகைப்படம் மாற்றம், செல்போன் எண் இணைத்தல், புதிய ஆதார் அட்டைப் புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட ஆதார் திருத்தங்கள் செய்யப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை அலுவலக நேரப்படி 10 மணிக்கு திறக்க வேண்டிய ஆதார் மையம் 11.30 மணி ஆகியும் திறக்கப்படாததால் காலை முதலே பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் நீண்ட நேரமாக காத்திருந்தனர்.

பொதுமக்கள் வாக்குவாதம்

இதையடுத்து காலதாமதமாக திறக்கப்பட்ட ஆதார் மையத்திற்கு பொதுமக்கள் சென்றனர். அப்போது பொதுமக்களிடம் 20 பேருக்கு மட்டுமே சேவை வழங்க வாய்ப்புள்ளது என ஊழியர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றமடைந்த அவர்கள் ஆத்திரமடைந்து ஊழிருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

அப்போது கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்திற்கு வந்த குன்னூர் ஆர்.டி.ஓ.விடம் அவர்கள் முறையிட்டனர். அவர் இது குறித்து சம்பந்தபட்ட தாசில்தாரிடம் பேசி அனைத்து அரசு வேலை நாட்களிலும் ஆதார் மையம் செயல்படவும், டோக்கன் முறை பின்பற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com