பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்

பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம் 18-ந் தேதி வரை நடக்கிறது
பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்
Published on

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வேதாரண்யம், மதுக்கூர், முத்துப்பேட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, திருச்சிற்றம்பலம், கோட்டைத்தெரு உள்ளிட்ட 7 துணை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நாளை(திங்கட்கிழமை) முதல் 18-ந் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் பி. எம். கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் இந்த முகாமில் இலவசமாக புதிதாக ஆதார் பதிவு செய்யலாம். இதைப்போல பழைய ஆதார் அட்டையில் பெயர், முகவரி மற்றும் மொபைல் எண் திருத்தம் செய்ய ரூ.50, பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி தகுந்த ஆவணங்களை கொண்டு வந்து ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com