ஆடி அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
Published on

ராமேஸ்வரம்,

புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி இறந்து போன தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பண பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.

இதனிடையே ஆடி அமாவாசையான இன்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும் இறந்து போன தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பண பூஜை செய்து வழிபடவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் 3 மணி நேரத்திற்கு மேலாக மிக பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் மழையில் நனைந்தபடி அக்னி தீர்த்த கடல் மற்றும் கோவிலில் உள்ள தீர்த்தக் கிணறுகளிலும் புனித நீராடிவிட்டு கோவிலின் ரதவீதிசாலையில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com