ஆடி மாதம்: இலவச ஆன்மிக பயணம் எப்போது தொடக்கம்?


ஆடி மாதம்: இலவச ஆன்மிக பயணம் எப்போது தொடக்கம்?
x

2,000 பக்தர்கள் கட்டணமின்றி ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்ல இந்து சமய அறிநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.

சென்னை,

ஆடி தமிழ் மாதம் தெய்வங்களுக்கான மாதமாக கருதப்படுகிறது. ஆடிப் பிறப்பில் இருந்து ஆடி இறுதி வரை ஒவ்வொரு நாளும் தெய்வீகச் சடங்குகள் கோவில்களில் நடத்தப்படுகின்றன. ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கான கொடைத் திருவிழாக்கள் தொடங்குகின்றன. புகழ்[பெற்ற பல்வேறு கோவில்களுக்கு பக்தர்கள் ஆன்மிக பயணம் மேற்கொள்வர்.

ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆயிரம் மூத்த குடிமக்களை கட்டணமில்லா ஆன்மிக பயணம் அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 2,000 பக்தர்கள் கட்டணமின்றி ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த ஆன்மிக பயணம் 5 கட்டங்களாக (வருகிற ஜூலை 18, 25, மாதம் 01, 08 மற்றும் 15 ஆகிய தேதிகளில்) தொடங்கப்பட உள்ளது. விண்ணப்பங்களை www.hrce.tn.gov.in என்கிற இணையத்தில் பதிவிறக்கம் செய்து ஜூலை 11ம் தேதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

1 More update

Next Story