ஆடித்தபசு திருவிழா சிறப்பாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும்; எம்.எல்.ஏ. வேண்டுகோள்

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்து துறை அதிகாரிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என ராஜா எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆடித்தபசு திருவிழா சிறப்பாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும்; எம்.எல்.ஏ. வேண்டுகோள்
Published on

சங்கரன்கோவில்:

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவை காண தமிழ்நாடு மட்டுமல்ல, வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கரன்கோவிலுக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஆடித்தபசு திருவிழா இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி தரிசனம் செய்வதற்கு காவல்துறை, நகராட்சி நிர்வாகம், கோவில் நிர்வாகம், போக்குவரத்து துறை, சுகாதாரத்துறை, மின்வாரியம், தீயணைப்புத் துறையினர், நெடுஞ்சாலை துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினரும் பொதுமக்களுக்கு பக்தர்கள் சிறப்பாக தரிசனம் செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்ய வேண்டும். அனைத்து அரசு துறையினரும் ஆடித்தபசு திருவிழாவை சிறப்பாக நடத்த பணி செய்து வரும் நிலையில் பொதுமக்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து ஆடித்தபசு திருநாள் சிறப்பாக நடக்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com