ஆனி கடைசி முகூர்த்த தினம்: சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் பத்திரப்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு

ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினத்தையொட்டி சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் பத்திரப்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான 12-ந்தேதி (இன்று) அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு உள்ளன.

எனவே, ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான 12-ந்தேதி (இன்று) ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்கள் மற்றும் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com