ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வு..!

ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வு..!
Published on

சென்னை,

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் தினமும் 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இது தவிர வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உள்பட 225 வகையான பால் பொருட்களைத் தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக, தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்கிறது.

இந்நிலையில் ஆவின் நெய், வெண்ணெய் விலையை உயர்த்தி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ஆவின் நெய் விலை ஒரு லிட்டருக்கு ரூ.70, அரைலிட்டருக்கு ரூ.50 அதிகரித்துள்ளது. 15 மில்லி நெய் பாக்கெட் ரூ.14க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு ரூபாய் உயர்த்தி ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது.

100 மில்லி பாக்கெட் ரூ.70ல் இருந்து ரூ.80 ஆகவும், 500 மிலி பாட்டில் ரூ.315ல் இருந்து ரூ.365 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் நெய் பாட்டில் ரூ.630ல் இருந்து ரூ.700 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வெண்ணெய் விலை அரை கிலோவுக்கு ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அரை கிலோ வெண்ணெய் விலை ரூ.275 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com