ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்வு? - தமிழக அரசு விளக்கம்

ஆவின் கிரீன் மேஜிக் பால் பாக்கெட் அதே விலையில் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்வு? - தமிழக அரசு விளக்கம்
Published on

ஆவின் பால் ஒரு லிட்டருக்கு ரூ.6 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னவானது? விலை குறைப்பிற்கு பதிலாக, தற்போது இருமடங்கு (ரூ.6) விலை உயர்த்தப்பட்டிருப்பது மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்ற ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த நிலையில் இது உண்மையல்ல. தவறான தகவல் என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் ஆவின் விலை பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. தற்போது ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருப்பது 'கிரீன் மேஜிக் பிளஸ்' என்ற புதிய வகை பால் பாக்கெட்டாகும். இதில் கூடுதலாக வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டுள்ளது.

கொழுப்புச் சத்து 4.5 சதவீதம் மற்றும் இதர சத்துகள் 8.5 சதவீதமும் எஸ்என்எப் கொண்ட பழைய ஆவின் கிரீன் மேஜிக் அதே விலையில் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் உற்பத்தியும் நிறுத்தப்படவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com