நடமாடும் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை வாகனம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஆவின் பொருட்களை பேட்டரி வாகனங்கள் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நடமாடும் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை வாகனம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Published on

சென்னை,

ஆவின் நிறுவனத்தின் 'இல்லம் தேடி ஆவின்' திட்டத்தின் கீழ் கோடைக்காலத்தை முன்னிட்டு சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆவின் ஐஸ்கிரீம், தயிர், மோர், லஸ்ஸி உள்ளிட்ட பொருட்களை பேட்டரி வாகனங்கள் மூலம் விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் தொடக்க விழா சென்னை திட்ட தொடக்க விழா சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நடமாடும் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் 40 லட்சம் ரூபாய் செலவில் ஐஸ்கிரீம் விற்பனைக்கான பேட்டரி வாகனங்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com