ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு - நாளை முதல் அமல்

10 வகை மில்க் ஷேக்களின் விலை ரூ.30-ல் இருந்து 35 ஆக உயர்ந்துள்ளது.
ஆவின் பொருட்கள் விலை உயர்வு
Published on: 

சென்னை,

ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பால்வளத்துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு நிறுவனமான ஆவின் சார்பில் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி பால்கோவா, நெய், வெண்ணெய், மில்க் ஷேக், ஹெல்த் மிக்ஸ், யோகர்ட், பால் பிஸ்கட், சாக்லெட், குல்பி, கப் ஐஸ்கிரீம், சாக்கோ பார், சாக்கோ பீஸ்டு, கசாட்டா, கேன்டி, பிரீமியம் என 100-க்கும் மேற்பட்ட பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், மூலப்பொருள் விலை உயர்வு, தயாரிப்பு கொள்முதல் செலவு உள்ளிட்ட செலவுகளால் நெய், மில்க் ஷேக், மைசூர்பா, நெய், பட்டர் உள்ளிட்ட 63 ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி, 100 கிராம் நெய் ரூ.85-ல் இருந்து ரூ.95ஆக அதிகரித்துள்ளது. 100 கிராம் ரசகுல்லா ரூ.45ல் இருந்து ரூ.50ஆக அதிகரிப்பு, 100 கிராம் வெண்ணெய் ரூ.60ல் இருந்து ரூ.70ஆக அதிகரிப்பு, கால் கி குலோப்ஜாமுன் ரூ.100ல் இருந்து ரூ.115ஆக அதிகரிப்பு, கால் கிலோ மைசூர்பாக் ரூ.140ல் இருந்து ரூ.160ஆக அதிகரிப்பு, 200 மில்லி லிட்டர் லஸ்ஸி ரூ.20ல் இருந்து ரூ.23ஆக அதிகரித்துள்ளது. 500 மி.லி. ஆவின் நெய் ரூ.365-ல் இருந்து ரூ.400 ஆக விலை உயர்ந்துள்ளது. மில்க் ஷேக் விலை ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆக உயர்ந்துள்ளது. 500 கிராம் தயிர் ரூ.35-ல் இருந்து ரூ.40 ஆக விலை உயர்ந்துள்ளது. 250 கிராம் ஆவின் மைசூர்பா ரூ.140-ல் இருந்து ரூ.160 ஆக அதிகரித்துள்ளது.

10 வகை மில்க் ஷேக்களின் விலை ரூ.30-ல் இருந்து 35 ஆக உயர்ந்துள்ளது. 50 கிராம் ப்ரீமியம் கப் ரூ.5-ல் இருந்து 7 ஆகவும், ஒரு கிலோ தயிர் ரூ.120-ல் இருந்து 130 ஆக உயர்ந்துள்ளது. 200 மில்லி மோர் ரூ.8-ல்இருந்து 10 ஆகவும், பெட் பாட்டிலில் விற்கும் மோர் ரூ.12-ல் இருந்து 14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஆவின் பால் பொருட்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com