ஆவின் பால் உற்பத்தி விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் நாசர் முக்கிய ஆலோசனை

தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டலினை சந்தித்து, பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆவின் பால் உற்பத்தி விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் நாசர் முக்கிய ஆலோசனை
Published on

சென்னை,

ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பாலுக்கு லிட்டருக்கு 7 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஆவின் பால் உற்பத்தி குறைந்ததாக புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டலினை சந்தித்து, பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்குப் பிறகு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினருடன் அமைச்சர் நாசர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com