ஆயுத பூஜை: தமிழக மக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமியையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆயுத பூஜை: தமிழக மக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
Published on

சென்னை,

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை நாளை தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கவர்னர் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்:-

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பும் பாசமும் சகோதரத்துவமும் கொண்ட ஒரே குடும்பம் போல இந்த பண்டிகைகளை உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும்.

சரஸ்வதி தேவி தனது மெய்ஞானத்தால் அறியாமை என்ற இருளை அகற்றி, நமது மக்களுக்கு வளமையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். துர்கா தேவி, நம் மக்களை ஒரே குடும்பமாய் ஒன்றிணைத்து, அனைத்து தடைகளையும் தகர்த்து நமது தேசிய இலக்கை அடைவதற்கான வலிமையை நமக்கு வழங்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com