

தேனி,
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே மயிலாடும்பாறை பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 30). இவர் 15 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற சிறுமியை தினேஷ்குமார், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி காரில் கடத்தி சென்றுள்ளார்.
பின்னர், தனது உறவினர் வீட்டுக்கு சிறுமியை அழைத்துச் சென்று, ஒரு அறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் தினேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.