தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

சர்சைக்குரிய வினாத்தாள் விவகாரம் தொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்
Published on

கருப்பூர்:-

சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் சர்சைக்குரிய வினாத்தாள் இடம் பெற்றதை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பெரியார் பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் குழந்தைவேலு தலைமை தாங்கினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் இளங்கோ கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாநகர செயலாளர் பிரவீன்குமார், மேற்கு மாநகர செயலாளர் கனகராஜ், ஓமலூர் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன், சேலம் தாலுகா செயலாளர் பழனிசாமி, வாலிபர் சங்க நிர்வாகி வெங்கடேஷ், மாதர் சங்க தலைவர் பரமேஸ்வரி, மாவட்ட செயலாளர் ஞானசுந்தரி, ஒன்றிய நிர்வாகி ராஜாத்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com