சிவகங்கையில் பல்வேறு உணவகங்களில் சுமார் 100 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்..!

சிவகங்கையில் பல்வேறு உணவகங்களில் சுமார் 100 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டன.
சிவகங்கையில் பல்வேறு உணவகங்களில் சுமார் 100 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்..!
Published on

சிவகங்கை,

நாமக்கல்லில் சவர்மா சாட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், துறை ரீதியாக விளக்கம் கேட்டு நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கும், மாவட்ட நியமன அலுவலருக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.

உணவு சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 42 பேருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை, உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சிவகங்கையில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கடைகளில் செய்யப்படும் உணவுகளின் தரம், உணவகங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆகியவை குறித்து சோதனை செய்யப்பட்டது. அப்போது பல்வேறு உணவகங்களில் சுமார் 100 கிலோ கெட்டுப்போன இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 50 கிலோ கெட்டுப்போன உணவு, சவர்மா உள்ளிட்டவையும் பறிமுதல் செய்தனர். மேலும் அந்தந்த கடைகளுக்கு தலா ரூ. 2,000 அபராதம் விதித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com