கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய திசையன்விளை, நாலந்துலா பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய திசையன்விளை, நாலந்துலா பகுதியை சேர்ந்த கருப்பசாமி (வயது 30) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.

இதனையடுத்து அவர், நீதிமன்ற விசாரணைக்கு 1 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், கருப்பசாமிக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

கருப்பசாமியை தாழையூத்து காவல்துறையினர் தேடிவந்த நிலையில் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com