

இட்டமொழி:
வடக்கு விஜயநாராயணம் வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் பூலையா (வயது 41). இவர் கடந்த 2006-ம் ஆண்டு ஒரு பெண்ணை தாக்கியது தொடர்பான வழக்கு நாங்குநேரி கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் பூலையா நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இந்த நிலையில் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி, தலைமறைவாக இருந்த பூலையாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.