நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது

நெல்லையில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது
Published on

நெல்லை மாவட்டம் மானூர் கட்டப்புளி வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் டேவிட் மகன் பாக்கியம் (வயது 50). இவர் கடந்த 2017-ம் ஆண்டு பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த வழக்கில் மானூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 5 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் கோர்ட்டு அவருக்கு பிடியாணை பிறப்பித்தது. இந்த நிலையில் மானூர் போலீசார், பாக்கியத்தை கைது செய்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com