நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது

நெல்லையில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது
Published on

நெல்லை அருகே தாழையூத்து ராஜவல்லிபுரம் இந்திராநகரை சேர்ந்தவர் ஆறுமுகராஜா (வயது 36). இவரை கடந்த 2014-ம் ஆண்டு கொலை வழக்கில் தாழையூத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கடந்த 4 ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனையடுத்து அவருக்கு கோர்ட்டு பிடியாணை பிறப்பித்தது. இந்த நிலையில் தாழையூத்து போலீசார் ஆறுமுகராஜாவை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com