திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பகுதியில் திருட்டு வழக்கில் ஈடுபட்ட சீவலப்பேரியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு திருட்டு வழக்கில் ஈடுபட்ட சீவலப்பேரியை சேர்ந்த முத்து (வயது 47) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.

மேற்சொன்ன நபர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 4½ மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் முத்துவிற்கு, சேரன்மகாதேவி குற்றவியல் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து முத்துவை, வீரவநல்லூர் காவல்துறையினர் தேடிவந்த நிலையில் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com