தூத்துக்குடியில் திருட்டு வழக்கில் தலைமறைவானவர் கைது

தூத்துக்குடியில் நடந்த திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை, சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் (வயது 42) என்பவரை சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்-3ல் நடைபெற்று வந்த நிலையில், கணேசன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் கடந்த 22.7.2024 அன்று மேற்சொன்ன நீதிமன்றம் இவருக்கு பிடியாணை பிறப்பித்தை அடுத்து போலீசார் தொடர்ந்து கணேசனை தேடி வந்தனர்.
இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. மேற்பார்வையில், சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கடந்த 1½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த கணேசனை கடந்த 14ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.






