திருநெல்வேலியில் திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

சீதபற்பநல்லூர் பகுதியில் திருட்டு வழக்கில் ஈடுபட்ட அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
திருநெல்வேலியில் திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு திருட்டு வழக்கில் ஈடுபட்ட அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(எ) சங்கர் (வயது 38) கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு 3 மாதங்கள் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பாலசுப்பிரமணியன்(எ) சங்கரை சீதபற்பநல்லூர் காவல்துறையினர் தேடிவந்த நிலையில், நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com