திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது


திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 July 2025 10:55 PM IST (Updated: 17 July 2025 11:04 PM IST)
t-max-icont-min-icon

தாழையூத்து பகுதியில் கொலை முயற்சி, அடிதடி வழக்கில் ஈடுபட்ட ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு கொலை முயற்சி, அடிதடி வழக்கில் ஈடுபட்ட ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த ஆர்த்தீஸ்வரன் (வயது 22) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார். அவர் நீதிமன்ற விசாரணைக்கு ஒரு மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆர்த்தீஸ்வரனை தாழையூத்து போலீசார் தேடிவந்த நிலையில் இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

1 More update

Next Story