

தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் அய்யப்பன், அரியலூரில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், அரியலூர் மாவட்டத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடு, ஊழல் நடைபெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஊழல் செய்த அதிகாரிகளையும், துணை போன இடைத்தரகர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். மக்களுக்கு இந்த திட்டம் உண்மையாக கிடைக்க வேண்டும். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும், என்றார். அப்போது அவருடன், புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.