திருவள்ளூர் அருகே எரிவாயு மானியத்தில் முறைகேடு - ஒருவர் கைது

திருவள்ளூர் அருகே எரிவாயு மானியத்தில் சுமார் 18 லட்சம் முறைகேடு செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அருகே எரிவாயு மானியத்தில் முறைகேடு - ஒருவர் கைது
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் அரசு வழங்கும் எரிவாய் மானியத்தில் முறைகேடு நடந்திருப்பதாக திருவள்ளூர் மாவட்ட துணை பதிவாளர் கார்த்திகேயன் வணிகவியல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸ் சூப்பிரண்ட் பழனி குமாரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து திருவள்ளூர் வணிகவியல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் மற்றும் போலீசார் ஊத்துக்கோட்டை எரிவாய் மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது ஊத்துக்கோட்டை பகுதியில் பொது மக்களுக்கு 2015 முதல் 2017 வரை வழங்கிய எரிவாய் மானியத்தில் ரூபாய் 18 லட்சத்து 29 ஆயிரத்து 379 ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து ஊத்துக்கோட்டை ஏரிவாய் மையத்தில் இளநிலை உதவியாளர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியை சேர்ந்த எழிலரசனை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com