குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு

ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு
Published on

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விசுவேசுவரய்யா (தலைமையிடம்), குமார் (இணையவழி குற்றப்பிரிவு), போலீஸ் அதிகாரிகள், போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதேபோல் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தொழிலாளர் நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் 'ஹேன்ட் இன் ஹேன்ட்' இந்தியா இணைந்து உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, உறுதிமொழியை வாசிக்க அனைத்து துறைகளை சேர்ந்தவர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com