தமிழ்நாடு அரசின் சேவைகளை நேரடியாக வாட்ஸ்அப்-ல் பெறலாம் - புதிய திட்டம் அறிமுகம்

அரசு அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை; 66 சேவைகளை வாட்ஸ்அப் மூலம் பெற 'நம்ம அரசு நம்ம கையில்' என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நம்ம அரசு நம்ம கையில்
Published on

சென்னை,

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்கள் மற்றும் அரச சேவைகளை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்ப்பதற்காக, தமிழ்நாடு அரசு ‘நம்ம அரசு நம்ம கையில்’ என்ற புதிய அதிநவீன வாட்ஸ்அப் சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

66 அரசு சேவைகளை

இந்த புதிய திட்டத்தின் கீழ், தமிழக அரசின் 20 முக்கிய துறைகளை சேர்ந்த 66 அரசு சேவைகளை பொதுமக்கள் எல்லா இடத்திலிருந்தும் மிகவும் எளிதான முறையில் ஆன்லைன் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும்.

7845252525

இந்த சேவையை பயன்படுத்துவதற்கு பொதுமக்கள் 7845252525 என்ற அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘வணக்கம்’அல்லது ‘ஹாய்’ என்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.

மொழி

அதனை தொடர்ந்து, தமிழ் மொழியில் சேவைகளைப் பெற 'T' என்றும், ஆங்கிலத்தில் பெற 'E' என்றும் பதிவிட வேண்டும். அதனை தொடர்ந்து எந்த துறையில் சேவை வேண்டும் என்று குறிப்பிட்டால் அந்த சேவை கிடைக்கும்.

நம்ம அரசு - வாட்ஸ்அப் மூலம் 20 துறைகளின் 66 சேவைகளை பெறலாம்.

• பிறப்பு, இறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், வகுப்பு சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெறவும்,

• மின் கட்டணம், சொத்து வரி, தண்ணீர் வரி உட்பட பயன்பாட்டுக் கட்டணங்களை செலுத்தவும்,

• விண்ணப்ப நிலையையும் உடனுக்குடன் அறியவும்,

+917845252525 என்ற எண்ணுக்கு “வணக்கம் / Hi” என்று அனுப்பி சேவைகளை பெறுங்கள்!

X

Daily Thanthi
www.dailythanthi.com