பள்ளிபாளையம் அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; 10-ம் வகுப்பு மாணவர் பலி

பள்ளிபாளையம் அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; 10-ம் வகுப்பு மாணவர் பலி
Published on

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே அலமேடு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவருடைய மகன் சந்தாஷ் (வயது 16). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை சந்தோஷ் ஒரு மோட்டார் சைக்கிளில் வெப்படைக்கு சென்றார். பின்னர் மதியம் வெப்படையில் இருந்து பள்ளிபாளையத்துக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் நந்தகுமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அந்தசமயம் 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக மாதி விபத்துக்குள்ளானது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். நந்தகுமார் காயம் அடைந்து வலியால் துடித்தார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பள்ளிபாளையம் பேலீசார் சந்தோசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com