ராசிபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி 3 பேர் காயம்

ராசிபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி 3 பேர் காயம்
Published on

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே ஆட்டையாம்பட்டி பிரிவு பாரதி நகர் பகுதியை சேர்ந்த அசோகன் மகன் சதீஷ் (வயது 32). சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பெருமாள் (48). இவர்கள் இருவரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் புதுச்சத்திரத்தில் உள்ள சத்து மாவு தயாரிக்கும் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றனர். அவர்கள் ஆண்டகளூர் கேட் சர்வீஸ் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனை அருகே வேகத்தடையில் ஏறியபோது பரமத்திவேலூரை சேர்ந்த கோகுல் என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் சதீஸ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதல் சதீஸ், பெருமாள், கோகுல் மூவரும் காயம் அடைந்தனர். சதீஸ், பெருமாள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கோகுல் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com