விபத்தில் விவசாயி பலி

விபத்தில் விவசாயி பலி
Published on

பரமத்திவேலூர்:

கரூர் காமாட்சி அம்மன் கோவில் செங்குந்தபுரத்தை சேர்ந்த நல்லுசாமி மகன் பிரபாத் (வயது 37). விவசாயி. இவருடைய மனைவி தீபனா (30). இந்த நிலையில் தீபனா பிரசவத்திற்காக ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் இரவு பிரபாத் தனது மோட்டார் சைக்கிளில் மனைவியை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தார்.

அப்போது பரமத்திவேலூர் அருகே குப்புச்சிபாளையம் பிரிவு சாலை மேம்பாலம் அருகே சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பிரபாத் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற வேலூர் போலீசார் பிரபாத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com