நல்லம்பள்ளி அருகேமோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் சாவு

நல்லம்பள்ளி அருகேமோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் சாவு
Published on

நல்லம்பள்ளி:

தர்மபுரி மாவட்டம் தடங்கம் அருகே மேட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 36). சமூக ஆர்வலர். இவர் நேற்று சொந்த வேலையாக தடங்கத்தில் இருந்து தொப்பூர் நோக்கி மோட்டார் சைக்களில் சென்றார். அப்போது கெங்கலாபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பால பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தவரை அந்த வழியாக வந்த கிரானைட் பார லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பாலகிருஷ்ணன் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார், இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பாலகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மீட்புகுழுவினர் போலீசார் உதவியோடு விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com