வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலி
Published on

தர்மபுரி அருகே உள்ள எர்ரபையனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் சின்னசாமி (வயது 70). இவர் தர்மபுரியில் இருந்து பென்னாகரம் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் ஒரு திருமண மண்டபத்தின் அருகே சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்தில் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இந்த விபத்துக்கு காரணமானவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com