பாப்பாரப்பட்டி அருகேவாகனம் மோதி கட்டிட மேஸ்திரி பலி

பாப்பாரப்பட்டி அருகேவாகனம் மோதி கட்டிட மேஸ்திரி பலி
Published on

பாப்பாரப்பட்டி:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கம்புகால் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதன். இவருடைய மகன் சக்திவேல் (வயது 46). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இந்த நிலையில் சக்திவேல் நேற்று முன்தினம் இரவு பாப்பாரப்பட்டி அருகே கொட்லுமாரம்பட்டி கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக நாகதாசம்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து ஏரிக்கரை பென்னாகரம் சாலையில் நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்று விட்டது. இதனை தொடர்ந்து பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com