வௌளகோவில் அருகே அரசு பஸ்-வேன் மாதிய விபத்தில் தாய்-மகன் உள்பட 3 பேர் பலியானார்கள்.

வௌளகோவில் அருகே அரசு பஸ்-வேன் மாதிய விபத்தில் தாய்-மகன் உள்பட 3 பேர் பலியானார்கள்.
வௌளகோவில் அருகே அரசு பஸ்-வேன் மாதிய விபத்தில் தாய்-மகன் உள்பட 3 பேர் பலியானார்கள்.
Published on

வெள்ளகோவில்

வௌளகோவில் அருகே அரசு பஸ்-வேன் மாதிய விபத்தில் தாய்-மகன் உள்பட 3 பேர் பலியானார்கள்.

இந்த விபத்து குறித்து பேலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விபத்து

திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியைச்சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் யோகேஸ்வரன் (வயது 26). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருப்பூர் அருகே உள்ள நல்லூரில் ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். அதை தொடர்ந்து யோகேஸ்வரனின் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் பேசி முடிவு செய்ய வெள்ளகோவிலில் உள்ள யோகேஸ்வரனுடைய உறவினர் பூங்கொடி வீட்டிற்கு நேற்று காலை யோகேஸ்வரன் மற்றும் தாய் மாமன் மருதாச்சலம் (65), மருதாச்சலம் மகள் அனுரூபா (18), அனுரூபாவின் தோழி தர்ஷினி பிரியா (17), யோகேஸ்வரனுடைய தாய் தேவி, யோகேஸ்வரனுடைய அத்தை பிரமிளா (45) ஆகிய 6 பேரும் ஒரு வேனில் வெள்ளகோவில் வந்தனர். பின்னர் திருமணம் குறித்து பூங்கொடியிடம் பேசிவிட்டு மீண்டும் திருப்பூர் சென்றனர்.

இவர்களுடைய வன் கரூர்-கோவை மெயின் ரோட்டில் ஓலப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தது. வேனை யோகேஸ்வரன் ஓட்டினார். அப்போது எதிரே கோவையில் இருந்து கும்பகோணத்தை நோக்கி அரசு பஸ் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் வேனும், பஸ்சும் நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது.

3 பேர் பலி

இந்த விபத்தில் வேனில் இருந்த 6 பேரும் பலத்த அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதில் சம்பவ இடத்தில் யோகேஸ்வரன், பிரமிளா ஆகியோர் பலியானார்கள். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தேவியை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் வரும் வழியில் தேவி இறந்து விட்டதாக தெரிவித்தார். பலத்த காயம் அடைந்த மருதாசலம், அனுரூபா, தர்ஷினிபிரியா ஆகிய 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து காங்கயம் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுனன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com