கார் மோதி விவசாயி பலி

நன்னிலம் அருகே கார் மோதி விவசாயி பலியானார்.
கார் மோதி விவசாயி பலி
Published on

நன்னிலம்:-

நன்னிலம் அருகே உள்ள முடிகொண்டான் மேல தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது60). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை திருவாரூர்- மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் முடிகொண்டானில் இருந்து சைக்கிளில் சன்னாநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்புறமாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் திருவாரூர் நோக்கி சென்றது. இதில் படுகாயம் அடைந்த நடராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த நன்னிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை திருவாரூரில் போலீசார் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செயது கார் டிரைவர் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (31) என்பவரை கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com