விபத்தில் தொழிலாளி சாவு

விபத்தில் தொழிலாளி இறந்தார்.
விபத்தில் தொழிலாளி சாவு
Published on

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூர் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 38). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரும்பாலை அருகே உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். கே.ஆர்.தோப்பூர் பகுதியில் இவருடைய மோட்டார் சைக்கிள் மீது, பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் செந்தில்வேல் பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்வேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com