வாய்க்காலுக்குள் பொக்லைன் எந்திரம் கவிழ்ந்தது

தூர்வாரும் பணியின் போது வாய்க்காலுக்குள் பொக்லைன் எந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
வாய்க்காலுக்குள் பொக்லைன் எந்திரம் கவிழ்ந்தது
Published on

திருப்பூர் வாலிபாளையத்தில் ராஜ வாய்க்கால் உள்ளது. திருப்பூர் மாநகரில் வடக்கு பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் ராஜவாய்க்கால் வழியாக சென்று நொய்யல் ஆற்றில் கலக்கிறது. 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள ராஜ வாய்க்காலை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. 2 பொக்லைன் எந்திரங்கள் மூலமாக ராஜ வாய்க்கால் தூர்வாரும் பணி நேற்று நடைபெற்றது.

இந்தநிலையில் பொக்லைன் எந்திரம் ஒன்று திடீரென்றுஎதிர்பாராதவிதமாக வாய்க்காலுக்குள் சரிந்தது. இதில் டிரைவர், கிளீனர் காயமின்றி தப்பினார்கள். சம்பவம் பற்றி அறிந்ததும் வார்டு கவுன்சிலர் செந்தூர் முத்து உடனடியாக விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டார். ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்பட்டு பொக்லைன் எந்திரம் மீட்கப்பட்டு வெளியே கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு மீண்டும் தூர்வாரும் பணி நடந்தது. இந்த சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com