குடிமங்கலம் அருகே மொபட்மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குடிமங்கலம் அருகே மொபட்மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குடிமங்கலம் அருகே மொபட்மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Published on

குடிமங்கலம்

குடிமங்கலம் அருகே மொபட்மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மொபட்-மோட்டார்சைக்கிள் மோதல்

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே உள்ள முகவனூரை சேர்ந்தவர் பெருமாள்சாமி (வயது 85) இவர் மொபட்டில் செஞ்சேரிமலை ரோட்டில் முகவனூரில் இருந்து செங்காட்டுத் தோட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார்சைக்கிளில் பல்லடத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் நாகராஜ் (26) வந்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக மொபட் மீது மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மொபட் ஓட்டிச்சென்ற பெருமாள்சாமி மற்றும் மோட்டர்சைக்கிள் ஓட்டி வந்த நாகராஜ் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் பெருமாள்சாமியை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

2 பேர் சாவு

அங்கு பெருமாள்சாமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நாகராஜை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து குடிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மொபட் மீது மேட்டர்சைக்கிள் மேதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

-

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com