வாகனம் மோதி காவலாளி சாவு

வாகனம் மோதி காவலாளி உயிரிழந்தார்.
வாகனம் மோதி காவலாளி சாவு
Published on

தேவகோட்டை, 

தேவகோட்டை அருகே உள்ள தச்சவயல் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 70). இவர் ராம்நகர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்து பேக்கரி கடையில் குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் வாங்கிக்கொண்டு திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராமன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com